விமானத்தில் 100 ரசிகர்களை சுற்றுலா அனுப்பிய விஜய் தேவரகொண்டா


விமானத்தில் 100 ரசிகர்களை சுற்றுலா அனுப்பிய விஜய் தேவரகொண்டா
x

விஜய் தேவரகொண்டா 100 ரசிகர்களையும் தேர்வு செய்து விமானத்தில் மணாலிக்கு சுற்றுலா அனுப்பி உள்ளார்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை பிறமொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு பணம் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வந்தது. தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். இந்த நிலையில் 100 ரசிகர்களை தேர்வு செய்து சுற்றுலா அனுப்ப இருப்பதாக விஜய் தேவரகொண்டா அறிவித்து இருந்தார். அதற்கான அனைத்து செலவுகளும் ஏற்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். எந்த இடம் என்பதை தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது 100 ரசிகர்களையும் தேர்வு செய்து மணாலிக்கு சுற்றுலா அனுப்பி உள்ளார். விமானத்தில் செல்லும் ரசிகர்கள் கையசைத்து உற்சாகமாக கூச்சல் போடுகின்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் தேவரகொண்டா வெளியிட்டு 100 பேரை சுற்றுலா அனுப்புவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story