விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் வருகிற நவம்பர் 1-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story