சினிமா துளிகள்

சல்யூட் அடிக்காத போலீஸ்.... கோபப்பட்ட பிரபல நடிகர் + "||" + Police who did not salute .... angry famous actor

சல்யூட் அடிக்காத போலீஸ்.... கோபப்பட்ட பிரபல நடிகர்

சல்யூட் அடிக்காத போலீஸ்.... கோபப்பட்ட பிரபல நடிகர்
பிரபல நடிகர் ஒருவர் தனக்கு மரியாதை கொடுக்காத போலீஸ் அதிகாரி மீது கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஊருக்கு சென்றார். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களை வனத்துறையினர் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் சுரேஷ் கோபியிடம் புகார் அளித்தனர்.


அவர் ஒல்லூர் காவல் நிலைய போலீஸ் சி.ஜே ஆண்டனியை அழைத்து இந்த புகாரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கவனிக்கும்படி கூறினார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி சுரேஷ் கோபிக்கு சல்யூட் அடிக்கவில்லை. இதை கவனித்த சுரேஷ் கோபி நான் ஒன்றும் மேயர் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீர்களா? என்று கேட்டார். அதன்பின் அந்த போலீஸ் அதிகாரி அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்து விளக்கம் அளித்த சுரேஷ் கோபி சல்யூட் அடிக்க அந்த அதிகாரியை கட்டாயப்படுத்தவில்லை. அவரை சார் என்று மரியாதையுடன் தான் அழைத்தேன். நான் ஒரு எம்.பி, எனக்கு போலீசார் மரியாதை தர வேண்டும் என்பது ராஜ்யசபை செயலகம் கூறுகிறது. போலீசின் மரியாதை என்பது சல்யூட்தானே என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
2. மீண்டும் ஒரு என்ட்ரி.... பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
3. விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
4. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்
தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. 12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.