வாயில் சுருட்டுடன் அதர்வா... வைரலாகும் போஸ்டர்


வாயில் சுருட்டுடன் அதர்வா... வைரலாகும் போஸ்டர்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:26 PM GMT (Updated: 3 Jan 2022 5:26 PM GMT)

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அதர்வாவுடன் முன்னணி நடிகர்கள் இருவர் இணைகின்றனர்.

பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அதர்வா. இவர் துருவங்கள் பதினாறு, மாஃபியா, மாறன் படங்களை இயக்கிய கார்த்தின் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு நிறங்கள் மூன்று என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரகுமான் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். அதர்வா வாயில் சுருட்டுடனும், சரத்குமார், ரகுமான் நிற்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

விஜய் நடித்த வில்லு, அஜித் நடித்த ஏகன், பேராண்மை, நந்தலாலா உள்பட பல படங்களை தயாரித்த ஐங்கரன் கடந்த சில வருடங்களாக தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தது. 2022-ல் நிறங்கள் மூன்று படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 5-ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Next Story