ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி


ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி
x
தினத்தந்தி 21 Jan 2022 6:28 PM GMT (Updated: 21 Jan 2022 6:28 PM GMT)

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து வரும் வெற்றி திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸ் ஷிவானி நடிக்கும் பம்பர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. திடீரென நடந்த இவரின் திருமணத்தால் அவரின் ரசிகர்களையும் சினிமா துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story