ஆல்பம் பாடல் மூலம் இணைந்த சந்தோஸ் பிரதாப்-ஐரா


ஆல்பம் பாடல் மூலம் இணைந்த சந்தோஸ் பிரதாப்-ஐரா
x
தினத்தந்தி 11 May 2022 4:42 PM GMT (Updated: 2022-05-11T22:12:52+05:30)

சர்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த சந்தோஸ் பிரதாப் ஆல்பம் பாடல் மூலம் ஐராவுடன் இணைந்துள்ளார்.

சர்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் சந்தோஸ் பிரதாப். இவர் தற்போது நடித்துள்ள ஆல்பம் பாடலில் என்னங்க சார் உங்க சட்டம், சகா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஐரா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இருவரின் கூட்டணியில் ‘லவ் யூ பேபி’ என்ற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது.

பிரேம்ஜி அமரன் பாடியுள்ள இப்பாடலை ராக்கேஷ் அம்பிகாபதி இசையமைக்க, அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் எஸ்.காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார். இப்பாடலை பிரசாத் ராமன் இயக்கியிருக்கிறார். இந்த பாடல் வரிகளை "டசக்கு டசக்கு", "வா மச்சானே" ஆகிய பாடல்களை எழுதிய முத்தமிழும், பிரசாத் ராமனும் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் பாண்டி மற்றும் நடன அமைப்பாளராக ரிச்சட் கிறிஸ்டோபர் பணியாற்றியுள்ளனர். மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் இப்பாடல் வருகிற மே 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story