தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்
உணவுப் பொருட்கள் முதல் மருத்துவம், போக்குவரத்து, பயிற்சி வகுப்பு, வேலை போன்ற அனைத்திலும், ‘நுகர்வோர் உரிமைகள்’ மூலம் நம்மால் தீர்வு பெற முடியும்.
உலகில் உள்ள அனைவரும் நுகர்வோர்தான். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் நுகர்வோர் உரிமையின் அடிப்படையே. பொருளின் விலை, விற்பனை, தரம், சேவை, குறைபாடு, பொருளால் ஏற்படும் விளைவு என அனைத்தும் நுகர்வோர் உரிமையின் கீழ் அடங்கும்.
சேவையில் குறைபாடு, ஒப்பந்த வரையறையில் ஏமாற்றுதல், அதிக விலை என உணவுப் பொருட்கள் முதல் மருத்துவம், போக்குவரத்து, பயிற்சி வகுப்பு, வேலை போன்ற அனைத்திலும், ‘நுகர்வோர் உரிமைகள்’ மூலம் நம்மால் தீர்வு பெற முடியும்.
மேலும், பொருளோ, சேவையோ எதுவாக இருந்தாலும், அவற்றை நாம் வாங்கினோம் என்பதற்கு ஆதாரமான ரசீதை மறக்காமல் கேட்டுப் பெற வேண்டும். இதை அடிப்படையாக வைத்தே நாம் வாங்கிய பொருளில் குறைபாடு இருந்தால் நிரூபிக்க முடியும்; அதற்கான நிவாரணத்தையும் பெற முடியும்.
இவ்வாறு, நுகர்வோரின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 24-ந் தேதி ‘தேசிய நுகர்வோர் உரிமை தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
நுகர்வோர் உரிமை சட்டத்தின் கீழ், பாதுகாப்புக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, கேட்கும் உரிமை, நிவாரணம் பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை ஆகிய உரிமைகளை நம்மால் பெற முடியும்.
நம்முடைய உரிமைகளை அறிந்து விழிப்பாக இருப்போம்.
Related Tags :
Next Story