நிர்வாகத் திறனை மேம்படுத்தினால் தொழிலில் வெற்றி பெறலாம்


நிர்வாகத் திறனை மேம்படுத்தினால் தொழிலில் வெற்றி பெறலாம்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:00 AM IST (Updated: 9 Jan 2022 12:07 PM IST)
t-max-icont-min-icon

எதையும் முடிவு செய்வதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். எடுக்கும் முடிவின் மூலம் நிகழப்போகும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஆராய வேண்டும்.

வ்வொரு பெண்ணுக்குள்ளும் பல் வேறு திறமைகள் இருக்கின்றன. இதில் முக்கியமானது நிர்வாகத்திறமை. வீட்டிலும், தொழிலிலும், அலுவலகத்திலும் திறமையோடு செயல்படுவதற்கு நிர்வாகத் திறமை மிகவும் அவசியமானது. நீங்கள் சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால், அதை சரியான முறையில் நிர்வகிப்பதன் மூலம் பல வெற்றிகளை அடையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.

தனித்திருங்கள்:
உங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்குங்கள். எப்போதும், ஒரே வழியைப் பின்பற்றாமல், புது சிந்தனையுடன் உங்கள் திறமையைக் கொண்டு செயல்படுங்கள். முன்னோடிகளின் அறிவுரையைக் கேட்டு, அதில் உங்களுக்கு ஒத்துவரும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை அணுகுங்கள். இதில், தெளிவு இருக்க வேண்டும். இதன் மூலம், மற்றவர்களிடம் இருந்து நீங்கள் தனித்து தெரியலாம்.

முதலில் கேளுங்கள்:
எந்த விஷயத்திலும் முதலில், பிறரின் கருத்துகளைக் கவனமுடன் கேட்க வேண்டும். பின்பு உங்களின் கருத்துகளை வெளிப்படுத்துங்கள். அதேபோல், ஊழியர்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கும்போது கவனமாகக் கேட்டு, பிரச்சினையின் தன்மை, அதன் தீவிரம் ஆகியவற்றை மனதில் கொண்டு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இதன் மூலம் தொழிலை சுமுகமாகத் தொடர முடியும்.

தீர்க்கமாக இருங்கள்:
எதையும் முடிவு செய்வதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். எடுக்கும் முடிவின் மூலம் நிகழப்போகும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஆராய வேண்டும். அவற்றை திறமையாகக் கையாளும் வழிகளைத் தேட வேண்டும். எந்தப் பக்கமும் சார்ந்திராமல் நேர்மையாக முடிவு எடுக்க வேண்டும். பலமுறை யோசித்து நீங்கள் எடுத்த முடிவை செயல்படுத்தும்போது தீர்க்கமாக இருங்கள்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்:
தொழில்நுட்பத்தின் உதவியுடனே பெரும்பாலான தொழில்கள் நடைபெறுகின்றன. தினமும் பல புதிய தொழில்நுட்பங்கள் வருகின்றன. நீங்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், முதலில் அது தொடர்பான தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான், தொழில் போட்டியை எதிர்கொண்டு சமாளிக்க முடியும். தொழிலில் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் இதே அணுகுமுறை இருந்தால் எதிலும் வெற்றி பெற இயலும்.

தகவல் பரிமாற்றம்:
தொழிலில் வெற்றி பெறுவதற்கு தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது. பிறருக்கு நாம் தெரிவிக்கும் தகவலாக இருந்தாலும், மற்றவர்கள் நமக்குத் தெரிவிக்கும் தகவலாக இருந்தாலும், அதன் கருத்து மாறாமல் இருக்க வேண்டும். நாம் சொல்ல வரும் தகவல், தெளிவாகவும் பிறர் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பது அவசியம். அப்போதுதான், நமது இலக்கை எளிதில் அடைய முடியும்.

Next Story