பிசிசிஐயில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னாள் நிர்வாகிகள் முட்டுக்கட்டை


பிசிசிஐயில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னாள் நிர்வாகிகள் முட்டுக்கட்டை
x
தினத்தந்தி 12 July 2017 10:09 AM GMT (Updated: 12 July 2017 10:09 AM GMT)

பிசிசிஐயில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னாள் நிர்வாகிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக நிர்வாக குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்னாள் நிர்வாகிகளான ஸ்ரீனிவாசன், நிரஞ்சன் ஷா உள்ளிட்டோர் இடையூறாக இருப்பதாக வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு (COA),உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது.

நிர்வாக குழு தாக்கல் செய்துள்ள நான்காவது நிலவர அறிக்கை இதுவாகும். கடந்த பிப்ரவரி 27, மார்ச் 17 மற்றும் ஏப்ரல் 7 ஆகிய தேதிகளில் ஏற்கனவே நிலவர அறிக்கையை வினோத் ராய் தலைமையிலான குழு சமர்பித்து இருந்தது. 

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முன்னாள் நிர்வாகிகள் தங்கள் சுயநலன்களுக்காக பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தவதில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

லோதா குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், கிரிக்கெட் சங்கங்கள் கட்டுப்பாடு தங்கள் கைகளை விட்டு சென்றுவிடும் என அஞ்சுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பிசிசிஐ செயலர் அமிதாப் சவுத்ரி பரிந்துரையை அமல்படுத்த தீவிர முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story