ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 5 March 2019 4:09 PM GMT (Updated: 5 March 2019 4:10 PM GMT)

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி மொத்தம் 250 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 120 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 10 பவுண்டரிகளுடன் 116 ரன்களை எடுத்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து விளையாடியது. ஆஸ்திரேலிய அணியில் முதல் வரிசையில் இறங்கிய வீரர்கள் அவர்கள் பங்குக்கு ரன்களை சேர்க்க முயற்சித்தனர். இந்திய அணியும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் நெருக்கடியை கொடுத்தது.  ஸ்டோனிஸ் அபாரம் காட்ட முயற்சித்தார், அவரை இந்திய பந்துவீச்சாளர் சங்கர் வெளியேற்றினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களால் இந்திய பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியவில்லை.

கடைசி ஓவரிலும் ஜம்பாவை வெளியேற்றி அசத்தினார் சங்கர். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story