ஐ.பி.எல். போட்டி; சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல். போட்டி; சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 6 April 2019 10:33 AM GMT (Updated: 6 April 2019 11:25 AM GMT)

ஐ.பி.எல். போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வெற்றியை தனதாக்கியது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன.  இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை அணியில், ஸ்காட் குஜ்ஜெலின் அறிமுக வீரராக விளையாடுகிறார்.  ஹர்பஜன் சிங் அணியில் மீண்டும் இடம்பெற்று உள்ளார்.  காயத்தினால் டுவெயின் பிரேவோ, மொகித் சர்மா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடவில்லை.

இதேபோன்று பஞ்சாப் அணியில் ஹர்தூஸ் வில்ஜோயென் மற்றும் முஜீப் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரூ டை இடம் பெற்றுள்ளனர்.

Next Story