ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது
x
தினத்தந்தி 6 April 2019 2:24 PM GMT (Updated: 6 April 2019 2:24 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்து உள்ளது.

ஐதராபாத்,

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில், இன்று இரவு 8 மணிக்கு   ஐதராபாத் சன் ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. ரன் குவிப்பில் மிரட்டி வரும் ஐதராபாத் அணி உள்ளூரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது.

Next Story