ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 9 April 2019 2:13 PM GMT (Updated: 9 April 2019 2:13 PM GMT)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

டோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (மும்பை அணியிடம்) கண்டுள்ளது. 

இதேபோல் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 5 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றியை (ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) ஈட்டி இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் 5-வது வெற்றியை பெறுவதற்கு மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள்:-

டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள்:-

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுனில் நரின், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ்.


Next Story