ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 12 April 2019 2:14 PM GMT (Updated: 12 April 2019 2:14 PM GMT)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா, 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 26-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சந்தித்த ஆட்டம் சமன் (டை) ஆனது. இதில் இரு அணிகளும் தலா 185 ரன்கள் எடுக்க, அதன் பிறகு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வியையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியையும் பெற்றுள்ளன.

கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள்;-

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ரஸ்செல், லாக்ஸி பெர்குசன், உத்தப்பா,  பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ்.

டெல்லி அணியின் நட்சத்திர வீரர்கள்;-

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷிகர் தவான், ரபடா, ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் பட்டேல்.

Next Story