ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 179 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 179 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 12 April 2019 4:28 PM GMT (Updated: 12 April 2019 4:54 PM GMT)

டெல்லி அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயத்தது கொல்கத்தா அணி.

கொல்கத்தா, 

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 26-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்துள்ளது. 

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 65 (39) ரன்களும், அதிரடியாக விளையாடிய ஆந்த்ரே ரஸ்செல் 45 (21) ரன்களும்,  உத்தப்பா 28 (30) ரன்களும் எடுத்தனர்.

டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் மற்றும் கீமோ பால், ரபடா, மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதனையடுத்து டெல்லி அணி 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story