ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 15 April 2019 4:22 PM GMT (Updated: 15 April 2019 5:18 PM GMT)

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 31-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (51) ரன்கள், மொயின் அலி 50 (32) ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய மலிங்கா 4 விக்கெட்டுகளும், பெகரெண்டாராப் மற்றும் ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து மும்பை அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது. 

Next Story