ஐபிஎல்:டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு


ஐபிஎல்:டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 3 Oct 2021 9:39 AM GMT (Updated: 3 Oct 2021 9:49 AM GMT)

டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுகிறது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றைய 48-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுகிறது. 

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.  

பஞ்சாப் கிங்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை கடைசி ஓவரில் தோற்கடித்ததால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இருப்பினும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 7 தோல்வி) உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டிலும் ஆரோக்கியமான நிலையை எட்ட வேண்டியது முக்கியம். ஒன்றில் தோற்றாலும் வெளியேற்றம் தான். இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று  தெரிகிறது. 


Next Story