ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி


ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
x
தினத்தந்தி 4 Oct 2021 3:59 PM GMT (Updated: 4 Oct 2021 3:59 PM GMT)

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றைய 50-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற  ரிஷப் பாண்ட் முதலில்  பந்து வீச்சைத்  தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியின் வீரர்கள் சொப்ப ரன்களிலே விக்கெட்களை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் கேப்டன் டோனி ஆகியோர் நிலைத்து ஆடினர். இந்த ஜோடியில் அம்பத்தி ராயுடு மிக சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதி ஓவரில் டோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் சென்னை அணி 136 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்தது. இதையடுத்து டெல்லி எணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது.

சென்னை அணியில் அம்பத்தி ராயுடு 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தப்பா 19 ரன்களும், டோனி 18 ரன்களும் எடுத்தனர்.

டெல்லி அணியில் அக்சர் படேல் 2 விக்கெட்களும், அவேஷ் கான், ஆண்டிரிச், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

Next Story