போட்டியின் நடுவே வந்த கொரோனா பரிசோதனை முடிவு... தொற்று உறுதி... வீரர்கள் அதிர்ச்சி


போட்டியின் நடுவே வந்த கொரோனா பரிசோதனை முடிவு... தொற்று உறுதி... வீரர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 Dec 2021 4:19 AM GMT (Updated: 29 Dec 2021 4:19 AM GMT)

கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது

சார்ஜா,

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் மோதின.

இந்த தொடரின் கடைசி லீக்கில் இலங்கைக்கு எதிராக வங்காளதேச அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது. வங்காளதேச அணி 32.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்த போது, நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

போட்டிக்கு முன்பு வீரர்கள், பயிற்சியாளர்கள் , நடுவர்கள் என அனைவருக்கும் வழக்கம்போல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது அதன் முடிவுகள் வந்துள்ளன. இதில் நடுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன் ஆட்டம் ரத்து செய்யப்படடு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-வங்காளதேசம், பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

Next Story