டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஓய்வு முடிவை அறிவித்தார் குயின்டன் டி காக் - ரசிகர்கள் அதிர்ச்சி


டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஓய்வு முடிவை அறிவித்தார் குயின்டன் டி காக் - ரசிகர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 31 Dec 2021 1:07 AM GMT (Updated: 31 Dec 2021 1:07 AM GMT)

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்து முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா அணியை 113 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டி நடைபெற்ற நடைபெற்ற செஞ்சூரியன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை. இதனால் இந்த தோல்வி  தென்ஆப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இப்போட்டி முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்  அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

29 வயதாகும் குயின்டன் டி காக் தென்ஆப்பிரிக்கா அணியின் தூணாக விளங்கி வருகிறார். தென்ஆப்பிரிக்கா அணிக்காக 2012 ஆம் ஆண்டு அறிமுகமாகிய இவர் இந்திய மைதானங்களில் பல அதிரடி வெற்றிகளை தென்ஆப்பிரிக்கா  அணிக்கு பெற்று தந்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்களும் ஒரு நாள் போட்டிகளில்  5,355 ரன்களும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 1,827 ரன்களும் குவித்துள்ளார்.

இது குறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

"குயின்டன் டி காக் அவரது மனைவி சாஷாவுக்கு  விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. குயின்டன் டி காக் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என விரும்புகிறார். இதனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்துள்ளார்." 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்டன் டி காக்  அவர்களின் இந்த ஓய்வு முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story