தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: கே.எல் ராகுல் கேப்டனாக நியமனம்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: கே.எல் ராகுல் கேப்டனாக நியமனம்
x
தினத்தந்தி 31 Dec 2021 4:05 PM GMT (Updated: 31 Dec 2021 4:05 PM GMT)

ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடருக்குப் பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. 

இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாக சமீபத்தில் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ரோகித் சர்மாக கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தொடர் என்பதால், இந்த தொடர் மீது கடும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில்,   தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக  இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  கே.எல் ராகுல் தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு: - கே.எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட்  (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷான் (விக்கெட் கீப்பர்),  யுஸ்வேந்திர சஹால், ஆர். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்) புவனேஷ் குமார், தீபக் சஹார்,  பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகம்மதுசிராஜ், 

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  முழுமையான உடல் தகுதியை எட்டாததால்  ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. 


Next Story