"புதிய பஞ்சாப் அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" - ப்ரீத்தி ஜிந்தா


புதிய பஞ்சாப் அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - ப்ரீத்தி ஜிந்தா
x
தினத்தந்தி 12 Feb 2022 8:30 AM GMT (Updated: 12 Feb 2022 8:30 AM GMT)

எங்கள் புதிய பஞ்சாப் அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

மும்பை,

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. அதற்கான ஏலம் இன்று தொடங்கியது.   முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் தவானின் பெயர் தான் முதலில் வாசிக்கப்பட்டது. 

இந்நிலையில், டாடா ஐபிஎல் ஏலத்தை பார்க்க தயாராக உள்ளேன். சிவப்பு எலத்துடுப்புக்கு பதிலாக என் கைகளில் அழகான குழந்தையை வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும், 

எங்கள் புதிய பஞ்சாப் அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து  வாழ்த்துகள் பஞ்சாப் அணி. எங்களது திட்டங்களை செயல்படுத்துவோம். கவனம் செலுத்துவோம் என ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். 

Next Story