பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆஸ்திரேலியா அணி... டேவிட் வார்னர் நெகிழ்ச்சி பதிவு


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆஸ்திரேலியா அணி... டேவிட் வார்னர் நெகிழ்ச்சி பதிவு
x
தினத்தந்தி 25 Feb 2022 1:47 PM GMT (Updated: 25 Feb 2022 1:47 PM GMT)

நீண்டகாலம் தனது குடும்பத்தை பிரிந்து இருக்க போவது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்லவுள்ள ஆஸ்திரேலியா தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார்.

இந்த தொடருக்கு பிறகு அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். இதனால்  நீண்டகாலம் தனது குடும்பத்தை பிரிந்து இருக்க போவது  குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நெகிழ்ச்சியாக  பதிவிட்டுள்ளார்.

அதில் வார்னர் தெரிவித்துள்ளதாவது :
எனது குழந்தைகளுக்கு பிரியாவிடை கொடுப்பது என்பது  எப்போதுமே ஒரு கடினமான நிகழ்வாகும். கடந்த சில வாரங்களாக நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். மீண்டும் நாம் ஒன்று சேர்வதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை இருக்கப்போகிறது. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story