சொந்த மண்ணில் அதிக 20 ஓவர் போட்டிகளில் வெற்றி : கேப்டன் ரோகித் சர்மா சாதனை


சொந்த மண்ணில் அதிக 20 ஓவர் போட்டிகளில் வெற்றி : கேப்டன் ரோகித் சர்மா சாதனை
x
தினத்தந்தி 27 Feb 2022 1:05 AM GMT (Updated: 27 Feb 2022 1:05 AM GMT)

சொந்த மண்ணில் 17 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்தது. நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

நேற்று இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் சொந்த மண்ணில் அதிக 20 ஓவர் போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இது வரை சொந்த மண்ணில் 17  இருபது  ஓவர் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

இதற்கு முன் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் மற்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 15 வெற்றிகளை பெற்று தந்ததே சாதனையாக இருந்தது.

Next Story