24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி


24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
x
தினத்தந்தி 27 Feb 2022 2:45 AM GMT (Updated: 27 Feb 2022 2:45 AM GMT)

பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1998 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

லாகூர்,

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்த நிலையில் இந்த தொடருக்காக 24 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1998 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி  பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இலங்கை வீர்கள் ஜெயவர்தனே , சங்கக்காரா காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story