உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்
x
தினத்தந்தி 14 March 2022 2:47 PM GMT (Updated: 14 March 2022 2:47 PM GMT)

இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துபாய்,

இன்று நடைபெற்ற இந்தியா - இலங்கை  அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில்  238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான இரண்டாவது  டெஸ்ட் போட்டிக்கு பிறகான  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது.

அதன்படி 77 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில்  உள்ளது. 66 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் , 60 சதவீத வெற்றியுடன்  தென் ஆப்பிரிக்க அணி  3-வது  இடத்திலும் உள்ளது.

இன்று வெற்றி பெற்றதன் மூலம் இந்த பட்டியலில் 58 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 50 சதவீத வெற்றியுடன் இலங்கை அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது. 38 சதவீத வெற்றியுடன் நியூசிலாந்து  அணி 6-வது  இடத்தில் உள்ளது.

Next Story