நெருங்கும் ஐபிஎல் தொடர்.. காயத்தால் அவதிப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் நிலை என்ன ?


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 March 2022 10:52 AM GMT (Updated: 15 March 2022 10:52 AM GMT)

காயத்தில் இருந்து மீண்ட பிறகு உடற்தகுதி தேர்வில் வெற்றி அடைந்த பிறகே வீரர்களால் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

பெங்களூரு,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் பெங்களுருவில் நடந்தது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.14
கோடி கொடுத்து தீபக் சாகரை ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரின் போது தசைப்பிடிப்பு காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து சென்னை அணியின் மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாடும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

இதனால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருவரும் ஓய்வு எடுத்து வருகின்றனர். இவர்கள் காயத்தில் இருந்து மீண்ட பிறகு உடற்தகுதி  தேர்வில் வெற்றி அடைந்த பிறகே போட்டிகளில் பங்கேற்க முடியும்.

தீபக் சாகருக்கு உடற்தகுதி தேர்வுக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் நாளை அல்லது நாளை மறுநாள்  உடற்தகுதி தேர்வில் பங்கேற்பார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் அவர் தகுதி பெறும் பட்சத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் சூரத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்.

Next Story