ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 March 2022 4:59 PM GMT (Updated: 2022-03-30T22:29:46+05:30)

ஐபிஎல் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன.

கொரோனா பரவல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் தற்போது பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா அரசு ஐபிஎல் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்களை  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிசிசிஐ தரப்பில் இதற்கு தற்போது அனுமதி தரப்படவில்லை. 

ஏப்ரல் 3-வது வாரத்தில் இருந்து 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

Next Story