உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் இவரும் ஒருவர்- இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி..!!


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 4 April 2022 11:42 AM GMT (Updated: 4 April 2022 11:42 AM GMT)

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரை ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரின் இந்த ஆட்டம் குஜராத் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

இந்த நிலையில் சுப்மன் கில்லை  இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார். சுப்மன் கில் குறித்து அவர் கூறுகையில், " கில் மிகுந்த திறமைசாலி. உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் கில்லும் ஒருவர். 

ஒரு போட்டியில் ஒரு முறை அவர் அடிக்க தொடங்கிவிட்டால் அதன்பிறகு அவர் எளிதாக ரன்களை குவிக்கிறார். குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காகவே தன்னை அவர் உருவாக்கிக் கொண்டுள்ளார் " என தெரிவித்தார்.

Next Story