பும்ரா பாணியில் பந்துவீசிய வீரர்; திகைப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்- வைரல் வீடியோ


Image Courtesy : @cricketcomau
x
Image Courtesy : @cricketcomau
தினத்தந்தி 4 April 2022 12:29 PM GMT (Updated: 4 April 2022 12:29 PM GMT)

பும்ரா பாணியில் பந்துவீசிய வீரரின் வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

சிட்னி,

டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஜஸ்பிரீத் பும்ரா . வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தனக்கென தனித்துவமான பந்துவீச்சு பாணியை கொண்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி 5 முறை கோப்பைகளை வெல்ல பும்ராவின் பங்களிப்பு மகத்தானதாகும். அதுமட்டுமின்றி உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக ஜஸ்பிரீத் பும்ரா தற்போது திகழ்ந்து வருகிறார். 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை போன்றே ஒருவர் பந்துவீசி வருகிறார்.

இடதுகை பந்துவீச்சாளரான நிக் மாடின்சன் விக்டோரியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில்  என்பவர் அச்சுஅசல் பும்ராவே போன்றே பந்துவீசும் காட்சியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மைதானத்தில் மாடின்சனின் பந்துவீச்சை கண்ட வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு கணம் திகைப்பில் ஆழ்ந்தனர். குறிப்பாக அப்போது வர்ணனை செய்துகொண்டு இருந்த வர்ணனையாளர்கள், " இவரை " சிறப்பாக பந்துவீசுகிறீர்கள் பும்ரா " என நகைச்சுவையாக கூறினர்.

Next Story