பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த வெங்கடேஷ் ஐயர்- ரசிகர்கள் கிண்டல் ..!!


பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த வெங்கடேஷ் ஐயர்- ரசிகர்கள் கிண்டல் ..!!
x
தினத்தந்தி 5 April 2022 11:15 AM GMT (Updated: 5 April 2022 11:15 AM GMT)

பிரபல தெலுங்கு நடிகையின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு வெங்கடேஷ் ஐயர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

மும்பை,

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி புகழ் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வரும் இவர் , ஐபிஎல் தொடருக்கு பிறகு பிரபலமானார்.

இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவால்கரின் இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு செய்த கமெண்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவர்கொண்டாவுடன் டெக்ஸிவாலா படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிடுவதில் அதிக ஆர்வம் காட்டுபவர். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வழக்கம்போல் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு  வெங்கடேஷ் ஐயர் க்யூட் என்று கமெண்ட் பதிவிட்டார். அதற்கு பிரியங்காவும் யாரு, நீங்களா என்று பதில் கமெண்ட் போட இது ரசிகர்கள் கண்ணில் சிக்கியது.

இதனால் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் வெங்கடேஷ் ஐயரை கிண்டல் செய்து வருகின்றனர். வெங்கடேசின் இந்த கமெண்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

Next Story