டெர்பிஷேர் கவுண்டி அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது இந்திய கிரிக்கெட் அணி


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 8 April 2022 11:13 AM GMT (Updated: 8 April 2022 11:13 AM GMT)

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி டெர்பிஷேர் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை,

இங்கிலாந்தின் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களுள் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளும் ஒன்றாகும் . இந்த தொடரில் டெர்பி, எஸ்செக்ஸ் போன்ற பல அணிகள் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி  கவுண்டி அணிகளுள் ஒன்றான டெர்பிஷேர் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இரண்டு பயிற்சி ஆட்டங்களில் டெர்பிஷேர் அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டி ஜூலை 1 ஆம் தேதியும் 2-வது போட்டி ஜூலை 3 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

இந்த பயிற்சி ஆட்டங்கள் முடிந்தபிறகு இந்திய அணி இங்கிலாந்து அணியை ஜூலை 7 ஆம் தேதி முதல் 20 ஓவர் போட்டியில் எதிர்கொள்கிறது.

Next Story