ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : @IPL
x
Image Courtesy : @IPL
தினத்தந்தி 8 April 2022 1:33 PM GMT (Updated: 8 April 2022 1:33 PM GMT)

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக  குஜராத் டைட்டன்ஸ் வலம் வருகிறது. அதேபோல் பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்திய பின்னர் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது. அதன் பிறகு சென்னையை 54 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடி எழுச்சி பெற்றது. 

இந்த நிலையில் இன்று குஜராத் -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Next Story