"கிரிக்கெட் விளையாடியதற்காக மகனை அன்று அடித்தேன், இன்று பெருமைப்படுகிறேன்"- குல்திப் சென் தந்தை உருக்கம்


Image Courtesy : IPL / PTI
x
Image Courtesy : IPL / PTI
தினத்தந்தி 12 April 2022 12:14 PM GMT (Updated: 12 April 2022 12:14 PM GMT)

குல்தீப் சென்னின் தந்தை ராம் பால் தனது மகன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

மும்பை,

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி தங்கள் கடைசி போட்டியில் லக்னோ அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டி ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென்னுக்கு அறிமுக போட்டியாகும். 

இந்த போட்டியில் அவர் செட் பேட்ஸ்மேன் தீபக் ஹூடாவின் விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் இறுதி ஓவரில் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது குல்தீப் சென்னின் தந்தை ராம் பால் தனது மகன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். குல்தீப் சென் குறித்து அவர் கூறுகையில், " பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட் விளையாடியதற்காக எனது மகனைத் திட்டியுள்ளேன். அது மட்டுமின்றி அவரை அடித்து கூட இருக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை நான் ஒருபோதும் ஆதரித்தது இல்லை. 

இருப்பினும் அவன் தனது கனவுகளை ஒருபோதும் கைவிடவில்லை. இப்போது அவன் என்னை பெருமைப்படுத்தி உள்ளான்" என அவர் தெரிவித்தார்.

Next Story