ஆட்டத்தின் நடுவே ஆரஞ்சு நிற தொப்பியை கழற்றிய ஜாஸ் பட்லருக்கு குவியும் பாராட்டு- வைரல் வீடியோ


Image Courtesy : Twitter / @IPL
x
Image Courtesy : Twitter / @IPL
தினத்தந்தி 15 April 2022 11:17 AM GMT (Updated: 15 April 2022 11:17 AM GMT)

ஆரஞ்சு நிற தொப்பியை ஆட்டத்தின் நடுவே கழற்றிய பட்லரின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் குஜராத் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டிக்கு முன் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 15வது சீசனில் 141 ரன்கள் அடித்திருந்தார். அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்ச்நிற  தொப்பிக்கான பந்தயத்தில் 15-வது  இடத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா நேற்று அதிரடியாக விளையாடியதால் முதல் இடத்தில் இருந்த பட்லரை முந்தினார்.

ஆட்டத்தின் நடுவே இதனை அறிந்த பட்லர் உடனடியாக ஆரஞ்சு நிற தொப்பியை கழட்டினார். போட்டியின் நடுவில் ஆரஞ்ச் நிற தொப்பியை கழற்ற வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. இருப்பினும் ஜாஸ் பட்லர் ஆரஞ்சு நிற தொப்பியை கழற்றினார். மைதானத்தில் இதைக்கண்ட ரசிகர்கள் அவருக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். 

இந்த நிலையில், மீண்டும் பேட்டிங் செய்ய வந்த ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 23வது பந்தில் அரைசதம் அடித்தார். எனினும் அவர் ஆட்டமிழந்த உடன் ராஜஸ்தான் அணி சரிவை நோக்கி சென்று பின்னர் தோல்வியடைந்தது.

இந்த இன்னிங்ஸ் மூலம் மீண்டும் அவர் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் நிற தொப்பியை தனதாக்கி கொண்டார். இந்த நிலையில் அவரின் இந்த செயல் இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அவர் தொப்பியை கழற்றும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Next Story