"வில்லனே அவர் தான்"- டெல்லி வீரரை சாடிய ஸ்ரீகாந்த்


Image Courtesy : Twitter @DelhiCapitals
x
Image Courtesy : Twitter @DelhiCapitals
தினத்தந்தி 17 April 2022 7:20 AM GMT (Updated: 17 April 2022 7:20 AM GMT)

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியிடம் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

மும்பை, 

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில்  பேட்டிங் செய்த பெங்களூரு அணி 189 ரன்கள் குவித்தது.

190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்கத்தில் இருந்தே ரன் குவித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் மும்பை அணி களமிறங்கியது. எனினும் அந்த அணியின் மிச்சேல் மார்ஷ் 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிக அழுத்தத்தால் அவுட்டாகி வெளியேறினர். இந்த நிலையில் மிச்சேல் மார்ஷ்  ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய அணியின் அதிரடி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மார்ஷ் குறித்து அவர் கூறுகையில், " டேவிட் வார்னர் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினார். மார்ஷ் தான் இந்த போட்டிக்கு வில்லன். மிட்சல் மார்சால் உருவாக்கப்பட்ட அழுத்தம் இறுதிவரை நீடித்தது. மார்ஷ் யோசித்திருக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற்றதாகச் சொல்லி இருக்க வேண்டும். அஸ்வின் செய்ததைப் போலவே இது சிறந்த வழி.

நீங்கள் ஒரு ஆழமான பேட்டிங் வரிசையை  பெற்றிருந்தீர்கள், அவரால்  ரன் ரேட் ஓவருக்கு 13-14 ரன்கள் வரை உயர்ந்தது. இது டெல்லி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது " என தெரிவித்தார்.

Next Story