டெல்லி அணி அசத்தல் பந்துவீச்சு : 115 ரன்களில் சுருண்டது பஞ்சாப் அணி


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 20 April 2022 3:45 PM GMT (Updated: 20 April 2022 3:45 PM GMT)

பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும் தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில்  ஆட்டமிழந்தார்.

இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது. அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜிதேஷ் சர்மா 32 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் எல்பிடபியூ ஆனார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Next Story