ஐபிஎல் கிரிக்கெட் : 20 ஓவர் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து பிரித்வி ஷா புதிய சாதனை..!!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 20 April 2022 5:45 PM GMT (Updated: 20 April 2022 5:45 PM GMT)

பிரித்வி ஷா 20 ஓவர் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த  பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

எளிய இலக்கு என்பதால் முதல் பந்தில் இருந்தே அதிரடியை துவங்கினர் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஜோடி. சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இருவரும் பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள் ) 81 ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் டெல்லி அணி 10.3 ஓவர்களில் 119 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 41 ரன்கள் அடித்ததன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் பிரித்வி ஷா  2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதில் அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 1500 ரன்களுக்கு குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story