"காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தின் பாடலுக்கு நடனமாடிய தோனி, பிராவோ- வைரலாகும் வீடியோ


Image Courtesy : Twitter Chennai IPL
x
Image Courtesy : Twitter Chennai IPL
தினத்தந்தி 24 April 2022 2:25 PM GMT (Updated: 24 April 2022 2:25 PM GMT)

சென்னை அணியினர் வேஷ்டி சட்டையில் ஆடல் பாடல் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

மைதானத்தில் ஒருபுறம் சென்னை வீரர்கள் அனல்பறக்க விளையாடினாலும்  மைதானத்திற்கு வெளியே தற்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு காரணம் சென்னை அணியின் அங்கமாக இருக்கும் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வெ. அவரின் திருமண கொண்டாட்ட விழாவில் ஒரு வாரமாக ஈடுபட்டுள்ள சென்னை அணியினர் வேஷ்டி சட்டையில் ஆடல் பாடல் என கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சென்னை அணி வீரர்கள் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் "டூ டூ டூ " பாடலுக்கு வேஷ்டி சட்டையில் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் வழக்கம்போல் பிராவோ நடனத்தில் அசத்துகிறார். சென்னை அணியின் டோனி, ருதுராஜ் உள்ளிட்ட வீரர்களும் அந்த வீடியோவில் நடனமாடுகின்றனர். இந்த வீடியோவை அணி நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

Next Story