‘இன்னும் அதிக வேகத்தில் பந்து வீசுவேன்’- உம்ரான் மாலிக் நம்பிக்கை


‘இன்னும் அதிக வேகத்தில் பந்து வீசுவேன்’- உம்ரான் மாலிக் நம்பிக்கை
x
தினத்தந்தி 28 April 2022 11:26 PM GMT (Updated: 28 April 2022 11:26 PM GMT)

இன்னும் அதிக வேகத்தில் பந்து வீசுவேன் என்று உம்ரான் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடேஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐதராபாத் சன்ரைசர்சுக்கு எதிரான திரில்லிங்கான லீக் ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் சிக்சருடன் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வி அடைந்த போதிலும் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளிய ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற்றார். அதிக பட்சமாக மணிக்கு 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணியினரை அச்சுறுத்தும் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 22 வயதான உம்ரான் மாலிக் கூறுகையில் ‘அதிவேகமாக வீசுவதுடன், தொடர்ந்து சரியான அளவில் பந்தை ‘பிட்ச்’ செய்து விக்கெட்டை வீழ்த்துவது தான் எனது திட்டமாக இருந்தது.

‘பவுன்சர்’ பந்து வீச்சின் மூலம் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டைகைப்பற்றிய நான் ‘யார்க்கரில்’ விருத்திமான் சஹாவின் விக்கெட்டை சாய்த்தேன். சிறிய மைதானம் என்பதால் ஸ்டம்பை குறி வைத்து வீசுவதில் கவனம் செலுத்தினேன். 

கடவுள் விரும்பினால் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக என்னால் பந்து வீச முடியும். நிச்சயம் ஒருநாள் அதனை அடைவேன். தற்போதைக்கு சரியான அளவில் பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்த விரும்புகிறேன்’என்றார். 

Next Story