முகமது ஷமி செய்த காரியத்தால் அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்..!! - வைரல் வீடியோ


Image Courtesy : Twitter
x
Image Courtesy : Twitter
தினத்தந்தி 1 May 2022 5:02 AM GMT (Updated: 1 May 2022 5:02 AM GMT)

நேற்று நடந்த போட்டியில் ஷமி செய்த காரியத்தால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது பெங்களூரு அணியின் முதல் ஓவரை குஜராத் அணியின் முகமது ஷமி வீச வந்தார். முதல் பந்தை வீசிய அவர் பின்னர் அடுத்த பந்தை வீசுவதற்கு சில விநாடிகள் பந்துவீசவே யோசித்தார். பிறகு அவசர அவசரமாக டக் அவுட்டில் இருந்து சக வீரர் ஒருவரை அழைத்தார்.

களத்திற்குள் வந்த அந்த வீரர் டேப்பையும் எடுத்து வந்து திடீரென பந்துவீசும் தூரத்தை அளந்தார். ஷமிக்கு பவுலிங் தூரம் குறைவாக இருப்பது போன்றும், நோ பால் வீசிவிடுவது போன்றும் தோன்றியுள்ளது. இதனால் ஷமி அதனை சரி செய்துக்கொண்டார். இதனால் முதல் ஓவரிலேயே சில நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதனை கண்டு  அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்  உடனடியாக ஷமி-யை மேலும் காலம் தாழ்த்தாமல் பந்துவீசுமாறு கூறினர். நடுவர்களிடம் தனது நிலையை விலக்கிய அவர் பின்னர் பந்துவீச்சை தொடர்ந்தார்.

இதனால் போட்டி தொடக்கத்திலே சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

Next Story