"இன்னும் 2 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் " - கோலிக்கு வார்னர் வழங்கிய அறிவுரை..!!


Image Courtesy : Instagram / IPL / BCCI
x
Image Courtesy : Instagram / IPL / BCCI
தினத்தந்தி 5 May 2022 4:57 AM GMT (Updated: 5 May 2022 4:57 AM GMT)

கோலி "ஃபார்ம்"-க்கு திரும்புவதற்கு நீங்கள் என்ன அறிவுரை வழங்குவீர்கள் என வார்னர்-யிடம் கேட்கப்பட்டது.

மும்பை,

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 6 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது  போட்டியில் அவர் அரைசதம் அடித்தார். அதை தொடர்ந்து நேற்று 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.

 கோலி மீண்டும் தன்னுடைய சிறப்பான பேட்டிங் "ஃபார்ம்"-க்கு திரும்புவதற்கு நீங்கள் என்ன அறிவுரை வழங்குவீர்கள் என டெல்லி அணியின் வீரர் டேவிட் வார்னர்-யிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வார்னர், "இன்னும் 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மேலும் சந்தோசமாக அனுபவியுங்கள்.

 "ஃபார்ம்" தற்காலிகம் "கிளாஸ்" தான் நிரந்தரம். எனவே அதை தவறவிடக்கூடாது. இது அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான்" என அவர் கூறினார்.

டேவிட் வார்னர்-ரின் இந்த அறிவுரை தற்போது சமூக வலைத்தளங்களில்  பேசுபொருளாகியுள்ளது.

Next Story