பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா குஜராத்? - மும்பை அணியுடன் இன்று மோதல்


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 6 May 2022 7:06 AM GMT (Updated: 6 May 2022 7:06 AM GMT)

குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். 

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.

மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள  51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும்.

அதே நேரத்தில் 9 போட்டிகளில் 8 தோல்வியின் மூலம் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பாதையை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.

Next Story