"பொல்லார்ட்-க்கு எத்தனை வாய்ப்பு கொடுப்பீர்கள்?"- மும்பை அணிக்கு முன்னாள் வீரர் கேள்வி..!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 9 May 2022 11:47 AM GMT (Updated: 9 May 2022 11:47 AM GMT)

இந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

மும்பை,

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆதிகாரபூர்வகமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக மும்பை உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரின் மோசமான பேட்டிங் கருதப்படுகிறது. அவ்வப்போது ரோகித் சர்மா சோபித்தாலும் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்துவருகிறார்.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் பொல்லார்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

பொல்லார்ட் குறித்து அவர் கூறுகையில், " திடீரென்று இப்போது பார்க்கையில் மும்பை ஒரு நல்ல அணியாக தெரிகிறது. ஆனால் அந்த அணியில் ஒரு  உடனடி மாற்றம் தேவை. பொல்லார்ட்-க்கு பதில் டெவால்ட் ப்ரீவிஸ் வர வேண்டும். 

தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க திணறிவரும் பொல்லார்டுக்கு எத்தனை வாய்ப்புகள் கொடுப்பீர்கள்? அவரது பந்துவீச்சு இத்தகைய பிட்சில்  பயனுள்ளதாக இருக்கும் ஆனால் அவரது பந்துவீச்சுக்காக நீங்கள் அவரை அணியில் எடுக்க முடியாது . எனவே பொல்லார்டுக்கு டாட்டா சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். " என அவர் தெரிவித்தார்.

Next Story