நமணசமுத்திரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதல்; 15 பேர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


நமணசமுத்திரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதல்; 15 பேர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:53 PM GMT)

நமணசமுத்திரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதல்; 15 பேர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

புதுக்கோட்டை,

நமணசமுத்திரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார்-வேன் மோதல்

சென்னையில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருமயம் நோக்கி நேற்று ஒரு கார் சென்று கொண் டிருந்தது. அந்த கார் நமணசமுத்திரம் அருகே உள்ள வளையன் வயல் என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்ற பஸ் ஒன்றை கார் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.அப்போது திருமயத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த வேனும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் மற்றும் வேனில் பயணம் செய்த ஜெயலெட்சுமி (வயது 37), போதும்பொண்ணு (35), முத்துக்கண்ணு (34), இளஞ்சியம் (34), இந்திரா (45), மற்றொரு இளஞ்சியம் (59), மதி (45), மெய்யன் (36), மல்லிகா (37) , ராஜேஸ்வரி (50), சித்ரா (34), பொட்டம்மா (50), அம்மாகண்ணு (52), மற்றொரு முத்துக்கண்ணு (50), முத்தம்மா (45) ஆகிய 15 பேரும் படுகாயம் அடைந்தனர்.

வழக்குப்பதிவு

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story