போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:54 PM GMT)

போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,

போலீசாரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். இந்த நிலையில் ஏ.டி.எம் மையங்கள் சரிவர செயல்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த மாதர் சங்கம், வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது பள்ளிக்கரணை போலீசார் போராட்டத்்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து திருவாரூர் பஸ்நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமியப்பன், இடும்பையன், நகர செயலாளர் ராமசாமி, வாலிபர் சங்க நிர்வாகி கோசிமணி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வலங்கைமான்

இதேபோல வலங்கைமான் தாலுகா அலுவலக வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழுவை சேர்ந்த ராதா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலையா, நகர செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story