கும்பகோணத்தில், 10–ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கும்பகோணத்தில், 10–ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 3:55 PM GMT)

கும்பகோணத்தில், வருகிற 10–ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெ

நெய்வேலி,

கும்பகோணத்தில், வருகிற 10–ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெய்வேலியில் உள்ள பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முரளி, பிரேம்குமார், முத்துக்குமரன், மணிவாசகம், செந்தாமரைக்கண்ணன், பரந்தாமன், வெற்றிவேல், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெய்வேலி நகர செயலாளர் கார்த்திக் வரவேற்புரையாற்றினார். பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாநில துணைத்தலைவர் முத்துவைத்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை தலைவர் தலித் சக்திவேல், என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் திலகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற 10–ந் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது, வறட்சி பாதித்த மாவட்டங்களை பார்வையிடுவதற்கு, மாவட்ட ஆட்சி தலைவர்கள் தலைமையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு அனைத்து தரப்பு மக்களையும் பாகுபாடின்றி சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது, என்.எல்.சி. நிறுவனத்தில் வெளிமாநிலத்தினரை பணியில் அமர்த்தாமல் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க என்.எல்.சி. நிர்வாகம் முன் வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கணபதி, ராஜசேகர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் நெய்வேலி தொகுதி செயலாளர் சேகர், லோகநாதன், ராசவன்னியன், முத்துக்குமார், மோகன்தாஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story