வாலாஜாவில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை


வாலாஜாவில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-05T22:06:35+05:30)

வாலாஜா திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி பூர்ணிமா என்கிற நதியா (வயது 31). இவர், வாலாஜா அவுசிங் போர்டு அருகில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் அவுசிங் போர்டு வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்தபட

வாலாஜா,

வாலாஜா திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி பூர்ணிமா என்கிற நதியா (வயது 31). இவர், வாலாஜா அவுசிங் போர்டு அருகில் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் அவுசிங் போர்டு வழியாக சென்றார்.

அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பூர்ணிமா அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story