பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்


பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2017 5:23 PM GMT (Updated: 5 Jan 2017 5:23 PM GMT)

தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் வத்தலக்குண்டுவில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிர் கருகியதால், உயிரிழந்த விவசாயிகளி

வத்தலக்குண்டு,

தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் வத்தலக்குண்டுவில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிர் கருகியதால், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் ஓடுகிற நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவிடம் மனு கொடுப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இளைஞரணி தலைவர் அன்பு நன்றி கூறினார்.


Next Story