இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தேனி மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம்


இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தேனி மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 5 Jan 2017 6:12 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 997 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் 1–ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி

தேனி,

இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 997 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

கடந்த செப்டம்பர் மாதம் 1–ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 31 ஆயிரத்து 892 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களில், ஆண்கள் 5 லட்சத்து 10 ஆயிரத்து 501 பேர், பெண்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 256 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 135 பேர் அடங்குவர்.

இதையடுத்து செப்டம்பர் 1–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்காக மனுக்கள் பெறப்பட்டன.

இந்த பணிகளை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

10½ லட்சம் வாக்காளர்கள்

தேனி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 46 ஆயிரத்து 997 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஆண்கள் 5 லட்சத்து 17 ஆயிரத்து 338 பேரும், பெண்கள் 5 லட்சத்து 29 ஆயிரத்து 500 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 159 பேரும் அடங்குவர். ஆண் வாக்காளர்களை விட 12 ஆயிரத்து 162 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:–

ஆண்டிப்பட்டி தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,58,430

ஆண்கள் – 1,28,634

பெண்கள் – 1,29,775

மூன்றாம் பாலினம் – 21

பெரியகுளம் (தனி) தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,62,204

ஆண்கள் – 1,29,329

பெண்கள் – 1,32,778

மூன்றாம் பாலினம் – 97

போடி தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,60,680

ஆண்கள் – 1,28,822

பெண்கள் – 1,31,844

மூன்றாம் பாலினம் – 14

கம்பம் தொகுதி

மொத்த வாக்காளர்கள் – 2,65,683

ஆண்கள் – 1,30,553

பெண்கள் – 1,35,103

மூன்றாம் பாலினம் – 27

தொடர் சுருக்கத் திருத்த மனு

இதுகுறித்து கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், ‘இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த இடங்களில் பொதுமக்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், 1–1–2017–ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்ட அனைவரும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுக்கள், வாக்காளர் பட்டியல் தொடர் சுருக்கத் திருத்த மனுக்களாக பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஆனந்தி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சத்தியபாமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story